Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நத்தம் நிலத்துக்கு 'ஆன்லைன்' சேவை ஆக., மாதம் அமல்

நத்தம் நிலத்துக்கு 'ஆன்லைன்' சேவை ஆக., மாதம் அமல்

நத்தம் நிலத்துக்கு 'ஆன்லைன்' சேவை ஆக., மாதம் அமல்

நத்தம் நிலத்துக்கு 'ஆன்லைன்' சேவை ஆக., மாதம் அமல்

ADDED : ஜூலை 30, 2024 03:29 AM


Google News
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம், தாராபுரம் உள்ளிட்ட ஒன்பது தாலுகாவிலும், ஆக., மாதத்தில் இருந்து, நத்தம் நிலத்துக்கான 'ஆன்லைன்' சேவை கிடைக்குமென, வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு, ரயத்துவாரி நிலத்துக்கான விவரங்களை, கடந்த பல ஆண்டுகளாக கம்ப்யூட்டர் வாயிலாக பராமரிக்கிறது. ஆன்லைன் சேவையும் கிடைத்து வருகிறது. நத்தம் நிலம் தொடர்பான விவரம், புல வரைபடம் அனைத்தும், பதிவேடுக-ளாக மட்டுமே பராமரிக்கப்பட்டது.ஆன்லைன் சேவைக்கு உட்ப-டுத்தும் வகையில், 2017 ம் ஆண்டில், நத்தம் தொடர்பான விவரம் அனைத்தும், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பலகட்ட சரிபார்ப்-புக்கு பின், ஆன்லைன் சேவை கொடுக்க தயாராகி வருகின்றனர்.

முதல் கட்டமாக, திருப்பூர் வடக்கு மற்றும் ஊத்துக்குளி தாலு-காவில், இந்த சேவை துவங்கப்பட்டது. அடுத்த கட்டமாக, திருப்பூர் தெற்கு, அவிநாசி, ஊத்துக்குளி, பல்லடம் தாலுகா விவரம் இறுதி செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள், தங்களது நத்தம் சொத்துக்கான சிட்டா, நகலை பார்வையிட்டு, சரிபார்த்துக் கொள்ளலாம். தேவையற்ற பதிவுகள் இருந்தால், ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பித்து முறைப்படுத்திக்கொள்ளலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நில அளவைப்பிரிவு உதவி இயக்குனர் சிவக்குமார் கூறுகையில்,''ஒன்-பது தாலுகாவில் உள்ள, நத்தம் நிலத்துக்கான ஆன்லைன் சேவை, ஆக., மாதத்தில் இருந்து அமலுக்கு வரும். 'eservices' மூலமாக, மொபைல் போன் வாயிலாகவே, மாவட்டம், தாலுகா, கிராமத்தை தேர்வு செய்து, தங்களது புல எண்ணில் உள்ள விவ-ரத்தை பார்வையிடலாம். பதிவிறக்கம் செய்யலாம். விரைவில், நிலத்துக்கான புல வரைபடமும் ஆன்லைன் சேவையாக கிடைக்கும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us