'ஸ்டாலின் மிரட்டியதால் தான் பழனிசாமி கூட்டணிக்கு வரவில்லை'
'ஸ்டாலின் மிரட்டியதால் தான் பழனிசாமி கூட்டணிக்கு வரவில்லை'
'ஸ்டாலின் மிரட்டியதால் தான் பழனிசாமி கூட்டணிக்கு வரவில்லை'
ADDED : ஜூன் 06, 2024 07:41 PM
சென்னை:''தமிழகத்தில் பா.ஜ., ஓட்டு சதவீதம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது; முதல்வர் ஸ்டாலின் மிரட்டியதால் தான் எங்களுடன், பழனிசாமி கூட்டணிக்கு வரவில்லை,'' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் எம்.சக்கரவர்த்தி தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு, 5 தொகுதிகளுக்கு மேல் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். அது கிடைக்கவில்லை.
அதேசமயம், நாங்கள் எதிர்பார்த்தது போலவே, பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம், 11.24 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த, 2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது, நான்கு மடங்கு ஓட்டு சதவீதம் கூடியுள்ளது. இது, எளிதான காரியம் அல்ல.
இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, பா.ஜ., தான் மூன்றாவது பெரிய கட்சி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி, மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரின் கடின உழைப்பே காரணம்.
தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அண்ணாமலை பாத யாத்திரை சென்றார். இதற்கு கட்சியினரிடம் மட்டும் இன்றி, பொதுமக்களிடமும் வரவேற்பு கிடைத்தது.
பா.ஜ., உடன் கூட்டணி சேர்ந்தால் தங்களுக்கு, இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் ஓட்டுக்கள் கிடைக்காது என்று, அ.தி.மு.க.,வினர் கூறினர். ஆனால், பா.ஜ., இல்லாமல் அ.தி.மு.க., தனி அணி அமைத்து போட்டியிட்டும் அந்த சமூகத்தினரின் ஓட்டுக்கள் கிடைக்கவில்லை.
பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்காக மேலிட தலைவர்கள் முயற்சி எடுத்தனர்.
ஆனால், அ.தி.மு.க.,வில், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும் தான், பா.ஜ., உடன் கூட்டணி சேர விரும்பவில்லை.
பா.ஜ.,வை பொறுத்தவரை கூட்டணியை மேலிடம் தான் முடிவு செய்யும்.
பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி இருந்திருந்தால், தமிழகத்தில், 40 தொகுதிகளிலும் வெற்றி கிடைத்திற்கும். முதல்வர் ஸ்டாலின் மிரட்டியதால் தான் பழனிசாமி, பா.ஜ., உடன் கூட்டணி சேரவில்லை. ஆனால், கூட்டணி சேராததற்கு அ.தி.மு.க.,வினர் அண்ணாமலையை குறை கூறி வருகின்றனர்.
எதை வைத்து பழனிசாமியை மிரட்டினர் என்பதெல்லாம் ஊரறிந்த ரகசியம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.