துாத்துக்குடி தொகுதியில் 24 வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிய நோட்டா
துாத்துக்குடி தொகுதியில் 24 வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிய நோட்டா
துாத்துக்குடி தொகுதியில் 24 வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிய நோட்டா
ADDED : ஜூன் 06, 2024 02:45 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., - த.மா.கா, உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சார்பிலும், சுயேட்சையாகவும் 28 பேர் போட்டியிட்டனர். தி.மு.க., வேட்பாளர் கனிமொழி 5,40,729 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். மற்ற, 27 பேரும் டிபாசிட் இழந்தனர்.
அ.தி.மு.க., வேட்பாளர் சிவசாமி வேலுமணி 1,47,991 ஓட்டுகளும், பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்ற த.மா.கா, வேட்பாளர் விஜயசீலன் 1,22,380 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவீனா ரூத் ஜேன் 1,20,300 ஓட்டுகளும் பெற்றனர். 9806 ஓட்டுகள் பெற்று ஐந்தாவது இடத்தை நோட்டா பிடித்தது.
பகுஜன் ஜமாஜ், மக்கள் நல்வாழ்வு கட்சி, அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம், புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி, நாம் இந்தியர் கட்சி மற்றும் சுயேச்சையாக போட்டியிட்ட 19 வேட்பாளர்களையும்விட யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்ற வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட, நோட்டாவுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தன. தபால் ஓட்டில் 124 ஓட்டுகள் நோட்டாவுக்கு பதிவாகின. கடந்த தேர்தலில் 9234 ஓட்டுகள் நோட்டாவுக்கு பதிவாகின.