/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிறுவர்கள் பைக் ஓட்டுவது நெல்லிக்குப்பத்தில் அதிகரிப்பு சிறுவர்கள் பைக் ஓட்டுவது நெல்லிக்குப்பத்தில் அதிகரிப்பு
சிறுவர்கள் பைக் ஓட்டுவது நெல்லிக்குப்பத்தில் அதிகரிப்பு
சிறுவர்கள் பைக் ஓட்டுவது நெல்லிக்குப்பத்தில் அதிகரிப்பு
சிறுவர்கள் பைக் ஓட்டுவது நெல்லிக்குப்பத்தில் அதிகரிப்பு
ADDED : ஜூன் 06, 2024 02:45 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் போலீசாரின் அலட்சியத்தால் சிறுவர்கள் பைக் ஓட்டுவது அதிகரித்து வருகிறது.
மோட்டார் வாகன சட்டப்படி, 18 வயது பூர்த்தியானவர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது.
ஆனால், 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் அதிகளவு பைக் ஓட்டுவதால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க, மத்திய அரசு போக்குவரத்து விதிகளில் கடந்த 1ம் தேதி முதல் புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி 18 வயதுக்குட்பட்டோர் பைக், கார் போன்ற வாகனங்களை ஓட்டினால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் இதை நடைமுறைபடுத்துவதில் போலீசார் ஆர்வம் காட்டாமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் நெல்லிக்குப்பம் பகுதிகளில் சிறுவர்கள் பைக் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் பைக் ஓட்டுவதால், அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. எனவே, சிறுவர்கள் பைக் ஓட்டுவதை தடுக்க, போலீசார் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.