ராமநாதபுரத்தில் 4 சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க.,வை முந்திய நாம் தமிழர் கட்சி
ராமநாதபுரத்தில் 4 சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க.,வை முந்திய நாம் தமிழர் கட்சி
ராமநாதபுரத்தில் 4 சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க.,வை முந்திய நாம் தமிழர் கட்சி
ADDED : ஜூன் 06, 2024 03:01 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் லோக்சபா தொகுதி தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெய பெருமாள் டெபாசிட்இழந்துள்ள நிலையில் நான்கு சட்டசபை தொகுதிகளில் நாம்தமிழர் கட்சியை விட குறைவான ஓட்டு வாங்கியதால் அ.தி.மு.க., தொண்டர்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்கு 17 முறை தேர்தல் நடந்துள்ளது. இதில் அ.தி.மு.க., 4 முறை வென்றுள்ளது. தற்போது ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெய பெருமாள் 99,780 ஓட்டுகள் பெற்று டெபாசிட் இழந்து மூன்றாமிடம் பெற்றார். இவரை விட 2108 ஓட்டுகள் குறைவாக பெற்று நாம்தமிழர் கட்சி டாக்டர் சந்திர பிரபா 97,672ஓட்டுகளுடன்4 ம் இடம் பிடித்தார்.
அதே சமயம் அறந்தாங்கி, பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம் ஆகிய 4 தொகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளரை விட கூடுதல் ஓட்டுகள் பெற்று நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கு அ.தி.மு.க.,4ம் இடத்தில்உள்ளது.