ADDED : ஜூன் 06, 2024 03:01 AM

விருத்தாசலம்: கழுதுாரில் மாரியம்மன், திரவுபதி அம்மன், செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள திரவுபதி அம்மனுக்கு ஆண்டு தோறும் வைகாசி மாதம் தேர் திருவிழா நடப்பது வழக்கம்.
அதன்படி, நடப்பாண்டு தேர் திருவிழா கடந்த 19ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, இன்று (6ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு திருத்தேர் பழுதடைந்த நிலையில், ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக தேர் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம் நடக்கிறது.
இந்நிலையில், ரூ.1.25 லட்சம் மதிப்பில் தேர் அலங்கார துணியை, தனியார் நிறுவனம் வழங்கியது.