மோடி மாயை உடைக்கப்பட்டது : திருமாவளவன்
மோடி மாயை உடைக்கப்பட்டது : திருமாவளவன்
மோடி மாயை உடைக்கப்பட்டது : திருமாவளவன்
ADDED : ஜூன் 05, 2024 12:20 AM
சிதம்பரம்: நாட்டில் மோடி என்ற மாயையை இந்த தேர்தலில் மக்கள் உடைத்துள்ளனர் என, வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
சிதம்பரம் லோக்சபா தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற வி.சி.கட்சி தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:
தமிழ்நாடு முழுவதும், 40க்கு 40 தி.மு.க., கூட்டணி வெற்றி உறுதியாகியுள்ளது. அகில இந்திய அளவில், இண்டியா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. கடந்த முறை பா.ஜ., தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. மோடி அலை என்பது ஒரு மாயை. அது உண்மை இல்லை என இந்த தேர்தலில் மக்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அதிக பெரும்பான்மையை பெற முடியாத நிலை பா.ஜ., கவுக்கு ஏற்பட்டுள்ளது.
இண்டியா கூட்டணி மக்களின் நன் மதிப்பை பெற்றிருக்கிறது.
விழுப்புரம், சிதம்பரம் இரு தொகுதிகளிலும் வி.சி., கட்சியை மக்கள் வெற்றி பெறச் செய்து, அங்கீகாரம் வழங்கி உள்ளனர். மாநில கட்சி என்ற ஒரு அந்தஸ்தை பெற ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளனர்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் அதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.