/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஓய்வு ராணுவ அதிகாரி வீட்டில் 20 சவரன் திருடியோர் கைது ஓய்வு ராணுவ அதிகாரி வீட்டில் 20 சவரன் திருடியோர் கைது
ஓய்வு ராணுவ அதிகாரி வீட்டில் 20 சவரன் திருடியோர் கைது
ஓய்வு ராணுவ அதிகாரி வீட்டில் 20 சவரன் திருடியோர் கைது
ஓய்வு ராணுவ அதிகாரி வீட்டில் 20 சவரன் திருடியோர் கைது
ADDED : ஜூன் 05, 2024 12:25 AM
சென்னை, சென்னை, முகப்பேர் மேற்கு பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் வையாபுரி, 68; இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர், கடந்த மாதம் 29ம் தேதி, குடும்பத்துடன் சொந்த ஊரான புதுச்சேரி சென்றார்.
கடந்த 1ம் தேதி வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. படுக்கை அறையில் இருந்த பீரோவில் இருந்து, 20 சவரன் நகை மற்றும் 70,000 ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
இதுகுறித்து நொளம்பூர் போலீசார் விசாரித்தனர். சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகை மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விக்கி வசந்த், 19, சென்னை திருமுல்லைவாயில் ஸ்ரீதர், 21, மற்றும் ஆவடியைச் சேர்ந்த அகில், 21, ஆகியோர் சம்பவத்தில் ஈடு
பட்டது தெரிந்தது.
இதையடுத்து, கோவையில் பதுங்கியிருந்த மூன்று பேரையும், நொளம்பூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 20 சவரன் நகை மற்றும் 20,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
திருடிய பணத்தில் 50,000 ரூபாய்க்கு மொபைல் போன் வாங்கி, மீதி பணத்தை அவர்கள், உல்லாசமாக செலவு செய்துள்ளனர்.
11 சவரன் ஆட்டை
l கொடுங்கையூரைச் சேர்ந்தவர் தேவி, 40; தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று, தன் மகளின் கல்விச் சான்றிதழ் பெற, சூரப்பட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்றுள்ளார்.
வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, அவரது 'டிரெசிங் டேபிளில்' இருந்த தங்க வளையல்கள், கம்மல் உள்ளிட்ட 11 சவரன் நகைகள் திருடு போனது தெரிந்தது. கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
l சென்னை, குரோம்பேட்டை அடுத்த நாகல்கேணியைச் சேர்ந்தவர் இதயதுல்லா, 33. நேற்று முன்தினம், அப்பகுதி இறைச்சி கடைக்கு பணிக்கு சென்றார்.
இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 83,000 ரூபாயை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து, குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.