Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தமிழகத்திலே குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வென்ற காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூர்

தமிழகத்திலே குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வென்ற காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூர்

தமிழகத்திலே குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வென்ற காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூர்

தமிழகத்திலே குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வென்ற காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூர்

ADDED : ஜூன் 06, 2024 03:00 AM


Google News
விருதுநகர்:லோக்சபா தேர்தல் முடிவில் தமிழகத்திலே 4379 எனும் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வென்றவராக காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூர் உள்ளார்.

ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில் விருதுநகர் தொகுதியில் காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கும், தே.மு.தி.க., விஜயபிரபாகரனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

முதல் 7 சுற்றுக்கள் வரை விஜயபிரபாகரன் முன்னிலை வகித்தார். 8, 9 சுற்றுகளில் மாணிக்கம் தாகூர் முன்னிலை வகித்தார். 10வது சுற்றில் மீண்டும் விஜயபிரபாகரனும், 11வது சுற்றில் மாணிக்கம் தாகூரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர்.18வது சுற்று வரை பெரிய ஓட்டு வித்தியாசம் இல்லை. 2542 ஓட்டுக்கள் தான் முன்னிலை பெற்றிருந்தார்.

மொத்தமுள்ள 24 சுற்றுகளில் கடைசி ஆறு சுற்றுகள் அவருக்கு சாதகமாகி விட 4,633 ஓட்டுக்கள் முன்னிலையில் இருந்தார். பின் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது. இதில் மாணிக்கம் தாகூர் 2380, விஜயபிரபாகரன் 2634 ஓட்டுக்கள் பெற்றிருந்தனர். இதில் விஜயபிரபாகரன் முன்னிலை பெற்றாலும் வெற்றிக்கு உதவவில்லை.

மேலும் இயந்திர கோளாறு காரணமாக சாத்துார், சிவகாசி தொகுதிகளில் இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மட்டும் எண்ணப்படவில்லை.

தபால் ஓட்டு உட்பட இறுதி சுற்றுகள் முடிந்த பின் முதல் இரு வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு வித்தியாசத்தை விட அந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் குறைந்த அளவு ஓட்டு பதிவாகி இருந்தால் அவற்றை எண்ண தேவையில்லை என்ற விதியின் அடிப்படையில் அதை எண்ணாமல் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் முடிவை அறிவித்தார். இதில் 4379 எனும் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் மாணிக்கம் தாகூர் வென்றார்.

தமிழகத்திலே இவர் தான் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

'இண்டியா' ஆட்சியில் தீர்வு கிடைக்கும்


மதுரை திருநகரிலுள்ள அலுவலகத்தில் மாணிக்கம் தாகூர் கட்சியினர், பொதுமக்களை சந்தித்தார்.பின் அவர் கூறியதாவது: விருதுநகர் தொகுதி மக்களுடைய குரலாக தொடர்ந்து மூன்றாவது முறையாக லோக்சபாவில் ஒலிப்பேன்.விருதுநகரில் நிறைவேற்றப்படாத திட்டங்களாகட்டும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையாகட்டும் கனவாகவே உள்ளது. நொண்டிச் சாக்குகளை சொல்லி மத்திய அரசு தொடர்ந்து எய்ம்சை கட்டாமல் உள்ளது.இந்த முறை எய்ம்ஸ் கட்டடம் முடிக்கப்பட்டு நிறைவு பெறுகிற நிகழ்ச்சி மிக விரைவில் வரும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது. பட்டாசு தொழில், பிரிண்டிங் தொழில், தீப்பெட்டி தொழில் பிரச்னைகள் கண்டுகொள்ளப்படாமலும் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றாமலும் மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் 'இண்டியா' கூட்டணி ஆட்சி அமைந்த பின் தீர்வு கிடைக்கும் என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us