கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
ADDED : ஜூன் 06, 2024 03:00 AM

மந்தாரக்குப்பம்: நெய்வேலி என்.எல்.சி., ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
நெய்வேலி கிங்க்ஸ் கிரிக்கெட் அணி சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி என்.எல்.சி., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 20 ம் தேதி துவங்கியது. கடலுார், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த அணிகள் விளையாடின.
இறுதி போட்டியில் ஸ்பார்ட்டன் கிங்க்ஸ் அணி முதலிடம், கிங் மேக்கர்ஸ் அணி இரண்டாமிடம், மெஜஸ்டிக் அணி மூன்றாமிடம், எம்.சி.சி., அணி நான்காமிடமும் பிடித்தன.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் தலைமை தாங்கினார். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. கிரிக்கெட் அணி நிர்வாகிகள் ஹக்கிம் சேட், மணி, ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.