ADDED : ஜூன் 06, 2024 02:59 AM

கிள்ளை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கிள்ளை எம்.ஜி.ஆர்., திட்டு கடற்கரை துாய்மைப்படுத்தும் பணி நடந்தது.
சிதம்பரம் அருகே கிள்ளை பிச்சாவரம் வனச்சரகம் சார்பில், உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. கடலுார் மாவட்ட வன அலுவலர் குருசாமி தலைமை தாங்கினார். வனச்சரக அலுவலர் இக்பால் வரவேற்றார். கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்கள், மகளிர் மற்றும் தன்னார்வாலர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டத்தை, திருச்சி கோட்ட அஞ்சல் துறை தலைவர் ஸ்ரீமதி நிர்மலாதேவி துவக்கி வைத்தார்.
அதைதொடர்ந்து, கிள்ளை எம்.ஜி.ஆர்., திட்டு கடற்கரையோரம் துாய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆலிவ் ரிட்லி கடல் ஆமையின் தபால் தலை புத்தகம் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் வனவர் அருள்தாஸ், அஞ்சல் துறை துணைத் தலைவர் கலைவாணி, வனத்துறையை சேர்ந்த முத்துகுமரன் ஜெயவரதன், விக்னேஷ்பிரபு, அபிராமி, சரளா, அனுசுயா, செல்வபாண்டியன், பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.