அமைச்சர் தொகுதியில் முந்திய தே.மு.தி.க.,
அமைச்சர் தொகுதியில் முந்திய தே.மு.தி.க.,
அமைச்சர் தொகுதியில் முந்திய தே.மு.தி.க.,
ADDED : ஜூன் 06, 2024 03:00 AM
விருதுநகர்:விருதுநகர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட தற்போதைய வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரனின் தொகுதியான அருப்புக்கோட்டையில் தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரன் 61,659 ஓட்டுக்கள் பெற்றார். மாணிக்கம் தாகூர் 49,381 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றிருந்தார். 12,278 ஆயிரம் ஓட்டுக்கள் விஜயபிரபாகரன் அதிகம் பெற்றார்.
தே.மு.தி.க.,வின் மறைந்த தலைவரான விஜயகாந்தின் சொந்த ஊர் அருப்புக்கோட்டை ராமானுஜபுரம் தான். மேலும் அருப்புக்கோட்டை தொகுதியின் ஒன்றிய பகுதிகளிலும் பெண்களின் ஆதரவு விஜயபிரபாகரனுக்கே இருந்துள்ளது.