சென்னை, கோவையில் வீடுகள் விலை புள்ளிகள் உயர்வு
சென்னை, கோவையில் வீடுகள் விலை புள்ளிகள் உயர்வு
சென்னை, கோவையில் வீடுகள் விலை புள்ளிகள் உயர்வு
ADDED : ஜூன் 06, 2024 12:36 AM

சென்னை: நாடு முழுதும் வீட்டுவசதி திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு, குறைந்த வட்டியிலான நிதியுதவியை தேசிய வீட்டுவசதி வங்கி வழங்கி வருகிறது.
இதற்காக, நாடு முழுதும், 50 நகரங்களில் ரியல் எஸ்டேட் சந்தை நிலவரத்தை, இந்த வங்கி தனி குழு அமைத்து ஆய்வு செய்கிறது.
சென்னை, கோவை உள்ளிட்ட 50 நகரங்களில் வீடுகளின் சராசரி விலை நிலவரம், கட்டடங்களின் விலை நிலவரம் குறித்த விபரங்களை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கையாக வெளியிடுகிறது.
கடந்த மார்ச் மாத நிலவரம் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த 50 நகரங்களில் ஒட்டுமொத்த சராசரி அடிப்படையில், ஆண்டுக்கு ஆண்டு என்ற கணக்கில் 5.1 சதவீதமும், காலாண்டு அடிப்படையில் 5.8 சதவீதமும் என்ற ரீதியில், வீடுகளுக்கான விலை புள்ளிகள் உயர்ந்துள்ளன.
இதில், சென்னையில் 2023 மார்ச் மாத நிலவரத்துடன் ஒப்பிடுகையில், 2024 மார்ச் மாதத்தில் 5.1 சதவீதம் அளவுக்கு வீடுகளின் விலை புள்ளிகள் உயர்ந்துள்ளன.
கோவையில் 0.6 சதவீதம் அளவுக்கு விலை புள்ளிகள் உயர்ந்துள்ளன. கடந்த 2023 டிச., இறுதியுடன் ஒப்பிடுகையில், 2024 மார்ச் இறுதியில், வீடுகளின் விலை புள்ளிகள், சென்னையில் 2.1 சதவீதம், கோவையில் 4.1 சதவீதம் உயர்ந்துள்ளன. கட்டுமான நிலையில் உள்ள வீடுகளின் விலை, கோவையில் வேகமாக உயர்ந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.