கமுதி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் வெட்டிக்கொலை
கமுதி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் வெட்டிக்கொலை
கமுதி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் வெட்டிக்கொலை
ADDED : ஜூன் 11, 2024 05:54 AM

கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கண்ணன் 51, அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கமுதி செட்டியார் தெருவை சேர்ந்த கண்ணன் 51. இவர் கே.பாப்பாங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். நேற்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் டூவீலரில் பள்ளிக்குச் சென்றார்.
பாப்பாங்குளம் விலக்கு ரோட்டில் காலை 8:00 மணியளவில் சென்ற போது கண்ணனை வழிமறித்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர். கமுதி டி.எஸ்.பி., இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் சென்று விசாரித்தனர்.
கண்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும் இதில் ஏற்பட்ட பிரச்னையால் கொலை செய்யப்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கண்ணனுக்கு மனைவி சங்கீதா, 2 குழந்தைகள் உள்ளனர்.