/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தற்கொலைக்கு முயன்ற விவசாயி மனைவி, மகன்கள் மீது பகீர் தற்கொலைக்கு முயன்ற விவசாயி மனைவி, மகன்கள் மீது பகீர்
தற்கொலைக்கு முயன்ற விவசாயி மனைவி, மகன்கள் மீது பகீர்
தற்கொலைக்கு முயன்ற விவசாயி மனைவி, மகன்கள் மீது பகீர்
தற்கொலைக்கு முயன்ற விவசாயி மனைவி, மகன்கள் மீது பகீர்
ADDED : ஜூன் 11, 2024 05:49 AM
சேலம் : சேலம், பாரப்பட்டி அடுத்த சென்னாக்கல்புதுாரை சேர்ந்த விவசாயி சின்னப்பன், 82. நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார். அப்போது போலீசார் நடத்திய சோதனையில், மஞ்சப்பையில் மண்ணெண்ணெய் கேன் இருந்ததால் பறிமுதல் செய்யப்பட்டது.
பின் மனு அளித்துவிட்டு விவசாயி கூறியதாவது:
என் கிராமத்தில், 7.5 ஏக்கர் நிலத்தை வாங்கி விவசாயம் செய்து வந்தேன். ஆனால் இரு மகன்கள், என் பெயரில் இருந்த நிலத்தை அபகரித்துக்கொண்டனர். இதற்கு என் மனைவியும் உடந்தை. அதை தட்டிக்கேட்டதால் அடித்து துன்புறுத்தி வீட்டைவிட்டு விரட்டி விட்டனர். தற்போது ஒருவேளை உணவுக்கு வழியின்றி தங்க இடமின்றி சாலையோரம் தவித்து வருகிறேன். வாழ முடியாமல் தற்கொலை முடிவுக்கு வந்து மண்ணெண்ணெய் கேனுடன் இங்கு வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.