Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ எலத்துாரில் 2ம் முறை தப்பிய சிறுத்தை சத்தியமங்கலம் திரும்பிய தனிப்படை

எலத்துாரில் 2ம் முறை தப்பிய சிறுத்தை சத்தியமங்கலம் திரும்பிய தனிப்படை

எலத்துாரில் 2ம் முறை தப்பிய சிறுத்தை சத்தியமங்கலம் திரும்பிய தனிப்படை

எலத்துாரில் 2ம் முறை தப்பிய சிறுத்தை சத்தியமங்கலம் திரும்பிய தனிப்படை

ADDED : ஜூன் 11, 2024 05:38 PM


Google News
ஓமலுார்:சேலம் மாவட்டம், டேனிஷ்பேட்டை வனச்சரகம் எலத்துார் காப்புக்காட்டில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை வேட்டையாடுவதாக, அப்பகுதி அடிவார மக்கள், 2023 ஆகஸ்டில் தெரிவித்தனர்.

செப்., 25ல் பண்டத்துக்காரன் கொட்டாய் அருகே உள்ள கரட்டில் சிறுத்தை நடமாட்டத்தை அப்பகுதியில் வேலை செய்த தோட்ட தொழிலாளர்கள் பார்த்துள்ளனர். தொடர்ந்து, வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. ஒரு வாரமாகியும் சிறுத்தை சிக்கவில்லை.

வேறு பகுதிக்கு சென்றதாக கூறி, கூண்டை வனத்துறையினர் அகற்றினர். ஆனால், வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தில் அடிக்கடி ஆடுகள் காணாமல் போவது தொடர்ந்தது. கடந்த மே இறுதியில் மேச்சேரி, வெள்ளாரில் ஒரு மாட்டை கடித்துள்ளது.

மீண்டும் டேனிஷ்பேட்டை வனத்துறையினர், சிறுத்தையை பிடிக்க தீவிரம் காட்டினர். இரு நாட்களுக்கு பின், தீவட்டிப்பட்டி அருகே எலத்துார், காமராஜர் நகரில் வீட்டில் இருந்த ஒரு நாய்; காருவள்ளி, கோம்பைக்காட்டில் விவசாயி சீனிவாசனின் பசு மாடு வேட்டையாடப்பட்டன. இதனால் மீண்டும் அங்கு சிறுத்தை வரும் என கருதிய வனத்துறையினர் கேமரா பொருத்தினர்.

அதன்படி கடந்த, 3 இரவு, 11:00 மணிக்கு அங்கு வந்த சிறுத்தை, ஏற்கனவே கொன்ற பசுவை தின்றுவிட்டு மீண்டும் அருகே உள்ள கரட்டுக்கு சென்றது. மாடு அருகே சிறுத்தை நின்றிருந்த காட்சி, அங்கு மரத்தில் கட்டப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. இதனால் சிறுத்தை என்பதை வனத்துறையினர் உறுதிப்படுத்தினர்.

இம்முறை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என எண்ணிய வனத்துறையினர் அப்பகுதி உட்பட நான்கு இடங்களில் கூண்டுகள் வைத்து கண்காணித்தனர். மேலும், ஈரோடு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பயிற்சி பெற்ற, 8 பேர் அடங்கிய தனிப்படையினரை, டேனிஷ்பேட்டை வரவழைத்தனர்.

அவர்கள் ஒரு வாரமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், சிறுத்தை சிக்கவில்லை. அதே நேரம் கால்நடைகளுக்கு பாதிப்பு இல்லை என தெரிந்தது. இதனால் வேறு பகுதிக்கு சிறுத்தை சென்றுவிட்டதாக தனிப்படை வீரர்கள் கூறினர். அவர்கள் நேற்று, சத்தியமங்கலம் சரணாயலத்துக்கு திரும்பினர்.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சிறுத்தை நடமாட்டம் குறித்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us