தொழில் முனைவோர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
தொழில் முனைவோர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
தொழில் முனைவோர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூன் 13, 2024 01:56 AM
சென்னை:கவின்கேர் நிறுவனம், மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் இணைந்து, திறன்மிக்க தொழில் முனைவோருக்கு வழங்கும், 'சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதுகள் - 2024' பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், 50 கோடி ரூபாய்க்கு மிகாமல் வருவாய் ஈட்டியுள்ள, புதுமையான தொழில் மாடல்களை கொண்டிருக்கும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், இந்த விருதுக்கு, https://ckinnovationawards.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், 97899 60398 என்ற மொபைல் எண்ணுக்கு, 'மிஸ்டு கால்' கொடுத்து, விபரங்களைப் பெறலாம்.
விருதுக்கு விண்ணப்பிக்க, ஜூலை 8 கடைசி நாள். விருதாளருக்கு விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
அவர்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல், நிதியுதவி, வடிவமைப்பு, காப்புரிமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்படும்.