புதிய சட்டங்களை எதிர்த்து தி.மு.க., --- அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
புதிய சட்டங்களை எதிர்த்து தி.மு.க., --- அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
புதிய சட்டங்களை எதிர்த்து தி.மு.க., --- அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 05, 2024 10:48 PM

சென்னை:மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டங்களை திரும்ப பெறக்கோரி, தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றம் முன் தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்திய தண்டனை சட்டம், குற்ற விசாரணை நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக் ஷிய அதினியம் என்ற பெயரில் புதிய சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி, இம்மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
தி.மு.க., சட்டத்துறை செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்று, இந்த சட்டங் களை திரும்பப் பெற வேண்டும் என, பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின், என்.ஆர்.இளங்கோ அளித்த பேட்டி:
பார்லிமென்டில் எவ்வித விவாதங்களும் இல்லாமல், எதேச்சதிகாரமாக மூன்று சட்டங்களை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
மத்திய அரசு எப்படி அரசியல் அமைப்புக்கு விரோதமாக செயல்படுகிறது என்பதற்கு, இதுவே ஒரு சிறந்த உதாரணம். இந்த சட்டங்கள் நடைமுறைக்கு கடினமானவை; நீதி பரிபாலனத்துக்கு மிகவும் எதிரானவை. எனவே, இவற்றை திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறினார்.
இதேபோல, மூன்று சட்டங்களையும் திரும்ப பெறக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பிற்பகலில் அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான இன்பதுரை தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.