/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ திறக்கப்படாத சுகாதார வளாகம்; பரமக்குடி மக்கள் பாதிப்பு திறக்கப்படாத சுகாதார வளாகம்; பரமக்குடி மக்கள் பாதிப்பு
திறக்கப்படாத சுகாதார வளாகம்; பரமக்குடி மக்கள் பாதிப்பு
திறக்கப்படாத சுகாதார வளாகம்; பரமக்குடி மக்கள் பாதிப்பு
திறக்கப்படாத சுகாதார வளாகம்; பரமக்குடி மக்கள் பாதிப்பு
ADDED : ஜூலை 05, 2024 10:48 PM

பரமக்குடி,: பரமக்குடி நகராட்சி 12 வது வார்டில் சுகாதார வளாகம் திறக்கப்படாமல் உள்ளதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பரமக்குடி நகராட்சி 12வது வார்டு சவுராஷ்டிர மேல்நிலைப் பள்ளி அருகில் இரண்டு சுகாதார வளாகங்கள் இருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சுகாதார வளாகம் அடைக்கப்பட்டு ரேஷன் கடையாக செயல்பட்டது. இந்நிலையில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு தற்போது சுகாதார வளாகம் செயல்பட துவங்கியுள்ளது.
இந்நிலையில் அருகில் உள்ள நவீன சுகாதார வளாகம் கடந்த ஓராண்டாகவே பூட்டி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் திறந்தவெளியை பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
பொதுக் கழிப்பறையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.