/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பஸ் ஸ்டாண்டில் தேங்கிய மழைநீரால் அவதி பஸ் ஸ்டாண்டில் தேங்கிய மழைநீரால் அவதி
பஸ் ஸ்டாண்டில் தேங்கிய மழைநீரால் அவதி
பஸ் ஸ்டாண்டில் தேங்கிய மழைநீரால் அவதி
பஸ் ஸ்டாண்டில் தேங்கிய மழைநீரால் அவதி
ADDED : ஜூலை 05, 2024 10:48 PM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீரால் பஸ்ஸிருக்காக காத்திருக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை,கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, ராமேஸ்வரம், விருதுநகர், திருச்செந்துார், திருநெல்வேலி, சிதம்பரம், கும்பகோணம் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், கிராம பகுதிகளுக்கும் பஸ் இயக்கப்படுகிறது. தினந்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பஸ்ஸில் பயணம் செய்கின்றனர்.
நேற்று முன்தினம் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதியில் லேசான மழை பெய்தது. பஸ் ஸ்டாண்டில் லேசான மழைக்கு ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் பஸ்ஸிருக்காக காத்திருக்கும் மக்கள் தேங்கிநிற்கும் சிரமப்பட்டனர்.
எனவே பஸ் ஸ்டாண்டில் மழை நீர் தேங்காதவகையில் சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.