ஆடு மரண சர்ட்டிபிகேட் பெற 3 குழந்தைகளுடன் தர்ணா
ஆடு மரண சர்ட்டிபிகேட் பெற 3 குழந்தைகளுடன் தர்ணா
ஆடு மரண சர்ட்டிபிகேட் பெற 3 குழந்தைகளுடன் தர்ணா
ADDED : ஜூன் 04, 2024 01:41 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கால்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி, 35. கணவரை இழந்த இவர், தன் மூன்று பெண் குழந்தைகள், மாமியாருடன் வசிக்கிறார். இவரின் நான்கு ஆடுகள், 2022 ஜூன் மாதம் நோய் தாக்கி இறந்தன. கால்நடை டாக்டர்கள் ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனர். எனினும், இதுவரை அதற்கான சர்டிபிகேட் வழங்கவில்லை. இரண்டு ஆண்டுகளாக, போஸ்ட் மார்டம் சர்ட்டிபிகேட் கிடைக்காததால், அரசின் இழப்பீடு பெற முடியாமல் முத்துலட்சுமி பாதிக்கப்பட்டுள்ளார்.
முதல்வரின் தனிப்பிரிவுக்கு பல முறை அவர் மனு அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், விரக்தியடைந்த முத்துலட்சுமி தன் மூன்று குழந்தைகள், மாமியார் பேச்சி தாயுடன் துாத்துக்குடியில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் அலுவலகத்தில், நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர் போராட்டத்தை கைவிட்டார்.