Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தர்மபுரியில் பா.ம.க., தோல்வி: காரணம் கேட்ட சவுமியா அன்புமணி

தர்மபுரியில் பா.ம.க., தோல்வி: காரணம் கேட்ட சவுமியா அன்புமணி

தர்மபுரியில் பா.ம.க., தோல்வி: காரணம் கேட்ட சவுமியா அன்புமணி

தர்மபுரியில் பா.ம.க., தோல்வி: காரணம் கேட்ட சவுமியா அன்புமணி

ADDED : ஜூன் 24, 2024 06:40 AM


Google News
Latest Tamil News
பாப்பிரெட்டிப்பட்டி : தர்மபுரி லோக்சபா தொகுதியில், பா.ம.க., தோல்வி குறித்து, வேட்பாளர் சவுமியா கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்தார்.

தர்மபுரி லோக்சபா தொகுதியில், பா.ம.க., சார்பில் போட்டியிட்ட சவுமியா, 21,300 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி, பென்னாகரம் சட்டசபை தொகுதிகளில்,-- தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளிய போதும் தோல்வி அடைந்தார்.

பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டசபை தொகுதி மக்களுக்கு, கடந்த 21, 22ல் சவுமியா நன்றி தெரிவித்தார்.

பின், தோல்விக்கான காரணங்கள் குறித்து அறிய, பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர் என, 100க்கும் மேற்பட்டோரை, செட்டிக்கரையிலுள்ள தன் இல்லத்துக்கு வரவழைத்தார்.

நேற்று முன்தினம் மாலை முதல், நேற்று அதிகாலை 2:00 மணி வரை, ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து, 314 ஓட்டுச்சாவடிகளில், ஒவ்வொரு கட்சியும் பெற்ற ஓட்டு விபரங்கள் குறித்து விசாரித்தார்.

இதில், 67 ஊராட்சிகளில், 38 ஊராட்சிகளில், பா.ம.க., முன்னிலை பெற்ற நிலையில், 29 ஊராட்சிகளில் ஓட்டுகள் குறைந்தது ஏன் என கேட்டறிந்தார்.

இதற்கு பதிலளித்து நிர்வாகிகள் கூறியது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்:

தேர்தலுக்கு முன், இதுபோன்ற ஆலோசனைகளை பெற்றிருக்க வேண்டும். கடசித் தலைவர் அன்புமணியை நேரில் பார்த்து பேச முடிவதில்லை. மக்கள் முன்னெடுப்பு போராட்டங்களை ஒவ்வொரு தொகுதியிலும் செய்ய வேண்டும்.

அப்படி செய்தால் வரும் தேர்தலில், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறலாம். அதற்கு நீங்கள் மாதம் இருமுறை தர்மபுரி மாவட்டத்துக்கு வர வேண்டும்.

தொடர்ந்து மக்களை சந்திக்க வேண்டும். மக்களுக்குத் தேவையான விஷயங்களை செய்து கொடுக்க வேண்டும். நீண்ட காலமாக தொகுதிகளில் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்னைகளை கேட்டு, அதற்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு சவுமியிடம் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

அனைத்தையும் பொறுமையாக கேட்ட சவுமியா, ஒவ்வொருவர் கூறியதையும் குறித்து கொண்டு, வரும் காலங்களில் இதையெல்லாம் செய்ய முயற்சிக்கிறேன் என நம்பிக்கையூட்டும் விதமாக பேசி அனுப்பியதாக கட்சியினர் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us