‛இண்டியா' கூட்டணி ஆட்சி அமைந்தபின் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் * காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி

ADDED : ஜூன் 06, 2024 02:44 AM
திருநகர்:‛இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தபின் விருதுநகர் தொகுதியின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்,' என காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
விருதுநகர் தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர் எம்.பி., மதுரை திருநகரிலுள்ள அலுவலகத்தில் நேற்று கட்சியினர், பொதுமக்களை சந்தித்தார்.
பின் அவர் கூறியதாவது:
விருதுநகர் தொகுதி மக்களுடைய குரலாக தொடர்ந்து மூன்றாவது முறையாக லோக்சபாவில் ஒலிப்பேன்.
விருதுநகரில் நிறைவேற்றப்படாத திட்டங்களாகட்டும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையாகட்டும் கனவாகவே உள்ளது. நொண்டிச் சாக்குகளை சொல்லி மத்திய அரசு தொடர்ந்து எய்ம்சை கட்டாமல் உள்ளது.
இந்த முறை எய்ம்ஸ் கட்டடம் முடிக்கப்பட்டு நிறைவு பெறுகிற நிகழ்ச்சி மிக விரைவில் வரும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது. பட்டாசு தொழில், பிரிண்டிங் தொழில், தீப்பெட்டி தொழில் பிரச்னைகள் கண்டுகொள்ளப்படாமலும் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றாமலும் மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் ‛இண்டியா' கூட்டணி ஆட்சி அமைந்த பின் தீர்வு கிடைக்கும் என்றார்.