சமரச தீர்வுக்கு செல்லும் நடிகர் விஷால் வழக்கு
சமரச தீர்வுக்கு செல்லும் நடிகர் விஷால் வழக்கு
சமரச தீர்வுக்கு செல்லும் நடிகர் விஷால் வழக்கு
ADDED : ஜூன் 20, 2024 02:05 AM
சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தாக்கல் செய்த மனு: விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில், சண்டக்கோழி - 2 படம் தயாரிக்கப்பட்டது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலைட் உரிமைக்காக, லைகா நிறுவனத்துடன் 2018ல், 23.21 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஜி.எஸ்.டி.,யை லைகா செலுத்தாததால், அபராதத்துடன் 4.88 கோடி ரூபாயை செலுத்தினேன்.
வட்டியுடன் சேர்த்து 5.24 கோடி ரூபாயை எனக்கு செலுத்த, லைகா நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
விசாரித்த நீதிபதி வேல்முருகன் இந்தப் பிரச்னையை சமரச பேச்சுக்காக மத்தியஸ்த மையத்துக்கு அனுப்பி வைத்தார்.