ADDED : ஜூன் 25, 2024 12:35 AM
சட்டசபையில், தமிழ் வளர்ச்சித்துறையில் அமைச்சர் சாமிநாதன் அறிவிப்புகள்:
பிறமொழி திணிப்பை எதிர்த்து, தங்கள் உயிரை ஈந்த மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில், 2025 முதல் ஜன., 25ம் தேதி தமிழ்மொழி தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கப்படும்
தமிழுக்கு செம்மொழி தகுதி பெற்றுத்தந்த கருணாநிதியின் பெருமையை போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி செம்மொழிநாள் விழாவாக கொண்டாடப்படும்
முனைவர் ஆறு. அழகப்பன், முனைவர் ராமலிங்கம், முனைவர் சத்தியசீலன், முனைவர் அரசு, பாவலர் பாலசுந்தரம், முனைவர் அறவாணன், முனைவர் திருநாவுக்கரசு, முனைவர் குமரவேலன், கவிஞர் வேழவேந்தன் ஆகியோரின் நுால்கள், 91.35 லட்சம் ரூபாயில் மதிப்பீட்டில் நாட்டுடமை ஆக்கப்படும்
சிறந்த நுாலை எழுதும் நுாலாசிரியர்களுக்கு 30,000த்தில் இருந்து 50,000 ரூபாயாகவும்; பதிப்பகத்தாருக்கு 10,000த்தில் இருந்து, 25,000 ரூபாயாகவும் பரிசுத்தொகை உயர்த்தி வழங்கப்படும்
பாவேந்தர் பாரதிதாசனால் பாராட்டப்பட்ட கவிஞர் முடியரசனுக்கு, சிவகங்கை மாவட்டத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில் சிலை நிறுவப்படும்
தமிழுக்கு தொண்டாற்றும் ஒருவருக்கு 10 லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம், பொன்னாடை, தகுதியுரை ஆகியவை கருணாநிதி பெயரில் விருதாக வழங்கப்படும்
சண்டிகர் தமிழ் மன்ற கட்டட விரிவாக்கம்; டில்லி தமிழ்ச் சங்க கலையரங்கம் புனரமைக்க, தலா, 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் அறிவித்தார்.