/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அருப்புக்கோட்டை நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்போது அதிகாரிகளின் மெத்தனமா... அரசியல் தலையீடா...அருப்புக்கோட்டை நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்போது அதிகாரிகளின் மெத்தனமா... அரசியல் தலையீடா...
அருப்புக்கோட்டை நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்போது அதிகாரிகளின் மெத்தனமா... அரசியல் தலையீடா...
அருப்புக்கோட்டை நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்போது அதிகாரிகளின் மெத்தனமா... அரசியல் தலையீடா...
அருப்புக்கோட்டை நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்போது அதிகாரிகளின் மெத்தனமா... அரசியல் தலையீடா...
ADDED : பிப் 11, 2024 12:35 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதால் அரசியல் தலையீடு உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.
அருப்புக்கோட்டை நகர் முழுவதும் கடைக்காரர்கள் தங்கள் கடைகளை நீட்டித்து ஆக்கிரமிப்பு செய்தும், கடை முன்பு சன் ஷேடுகளை தொங்க விட்டும் நடைபாதைகளை ஆக்கிரமித்தும் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடைஞ்சல் செய்கின்றனர். நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் நடைபாதைகளை நிரந்தரமாக ஆக்கிரமிப்பு செய்து விட்டனர்.
நடைபாதைகளில் நடக்க முடியாமல் பொதுமக்கள் ரோட்டில் தான் நடந்து செல்ல வேண்டி உள்ளது. ரோட்டின் இருபுறமும் நடைபாதை கடைகளை பரப்பி வைத்திருப்பதால் போக்குவரத்திற்கும் இடைஞ்சலாக உள்ளது.
நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நகராட்சி கூட்டத்தில் பலமுறை கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்திய போதிலும் அதிகாரிகள் மவுனம் சாதிக்கின்றனர்.
நகராட்சி, நெடுஞ்சாலை துறை, வருவாய்த்துறை போக்குவரத்து ஆகியோர் இணைந்து நகரில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய துறை அதிகாரிகள் இதுகுறித்து கேள்வி எழுப்பிய போது மழுப்பலான பதில்களையே கூறுகின்றனர். இதில் அரசியல் தலையீடு உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
தேர்தல் வருவதை ஒட்டி ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை பின்னர் வைத்துக் கொள்ளலாம் என அரசியல்வாதிகள் கூறியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் தான் நகரில் ஆக்கிரமிப்பிலையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினேஷ், உதவி பொறியாளர், நெடுஞ்சாலை துறை: ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு ஆர்.டி. ஓ, தேதி கேட்டுள்ளோம். வந்ததும் அகற்றப்படும்.
அசோக்குமார், நகராட்சி கமிஷனர்: நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்குவர். பின்னர் அகற்றப்படும்.
செந்திவேல், தாசில்தார்: ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து இதுவரை மீட்டிங் எதுவும் போடப்படவில்லை அதிகாரிகளிடம் கலந்து நடவடிக்கை எடுக்கப்படும்.