Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ புதிய பஸ் ஸ்டாண்ட் மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது வரும்

புதிய பஸ் ஸ்டாண்ட் மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது வரும்

புதிய பஸ் ஸ்டாண்ட் மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது வரும்

புதிய பஸ் ஸ்டாண்ட் மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது வரும்

ADDED : மே 28, 2025 07:07 AM


Google News
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி எழுப்பினார்.

அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடந்தது. கமிஷனர் ராஜமாணிக்கம், துணைத் தலைவர் பழனிச்சாமி, அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:

பாலசுப்பிரமணியன், (மார்க்சிஸ்ட்): நகரில் வாறுகால் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. நகராட்சி சுகாதார பிரிவில் தூய்மை பணியாளர்கள் எத்தனை பேர் உள்ளனர்.

ஒப்பந்த பணியாளர்களுக்கு நிலுவைத் தொகை உள்ளது உடனடியாக வழங்க நடவடிக்கை எடுங்கள்.

ராஜமாணிக்கம், கமிஷனர்: ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 2 மாத நிலுவைத் தொகை உள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக வழங்க முடியவில்லை. விரைவில் வழங்கப்படும்.

முருகானந்தம், (பா.ஜ.,) : அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் எப்போது முடிவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு வரும்.

தற்காலிக பஸ் ஸ்டாண்ட் படுமோசமாக உள்ளது. பயணிகள் நிற்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

பழனிச்சாமி, துணைத் தலைவர்: இதை கருத்தில் கொண்டு தான் தற்காலிக பஸ் ஸ்டாண்டு மதுரை ரோட்டில் நெசவாளர் காலனி எதிரே தற்காலிகமாக மாற்றப்பட உள்ளது.மேலும் நகரில் இறந்தவர்களின் இறுதிச்சடங்கு நடக்கும் போது ஊர்வலமாக தேரோடும் வீதி வழியாக மயானத்திற்கு செல்லும் போது பூக்களை மாலைகளை வீசி செல்வதால் மக்கள் சங்கடப்படுகின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழனிச்சாமி, துணை தலைவர்: கவுன்சிலர்கள் மற்றும் மக்களிடம் கருத்து கேட்டு நடத்தப்பட்டு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதங்கள் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us