/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரயில்வே ஸ்டேஷன்களில் கூரை இல்லா வாகன நிறுத்துமிடங்கள் ரயில்வே ஸ்டேஷன்களில் கூரை இல்லா வாகன நிறுத்துமிடங்கள்
ரயில்வே ஸ்டேஷன்களில் கூரை இல்லா வாகன நிறுத்துமிடங்கள்
ரயில்வே ஸ்டேஷன்களில் கூரை இல்லா வாகன நிறுத்துமிடங்கள்
ரயில்வே ஸ்டேஷன்களில் கூரை இல்லா வாகன நிறுத்துமிடங்கள்
ADDED : மே 28, 2025 07:09 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் வாகன நிறுத்துமிடங்களில் கூரைகள் வசதி போதிய அளவில்இல்லாததால் வாகனங்கள் மழை, வெயிலில் வாடுகின்றன.
மேலும் பாதுகாப்பற்ற இருள் சூழ்ந்த இடங்களில் நிறுத்துவதால் விஷப்பூச்சிகள் நடமாட்டத்தாலும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சிவகாசி, நரிக்குடி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சாத்துார் ஆகிய இடங்களில் ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன.
இதில் விருதுநகர், ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன்களில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இவை தவிர்த்து மற்ற ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் போதியகூரை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் வாகனங்கள் வெயில், மழையில் நாள், வாரக்கணக்கில் நிற்கும் நிலை உள்ளது. உடைமை பாதுகாப்பு உள்ளதே தவிர அவை நல்ல முறையில், பழுது பாதிக்காமல் இருக்க வாய்ப்பில்லை.
இந்த ரயில்வே ஸ்டேஷன்களில் வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதில் ஒப்பந்த நிர்வாகங்கள் குறியாக உள்ளதே தவிர அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில்லை.
ரயில்வே நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை. இதனால் நீண்ட துாரம் செல்லும் பயணிகளின் வாகனங்கள் வெயில், மழையில் வாடி வதங்கி பழுதடைகின்றன.
பெரும்பாலான ரயில்வே ஸ்டேஷன்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதாலும், அதன் வாகன நிறுத்தங்கள் இருள் சூழ்ந்த பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளதாலும் விஷப்பூச்சிகள் நடமாட்டமும் அதிகளவில் உள்ளது. இதனால மழை, பனி, இரவு நேரங்களில் அவை சூடுக்காக வண்டி இன்ஜின்களில் இருந்து விடுகின்றன.
வாகனம் எடுப்போரை தாக்க வழி உள்ளது. ஆகவே வாகன நிறுத்துமிடத்தை சுற்றி தரமான கம்பி வேலி அமைக்க வேண்டும். விஷப்பூச்சிகள் உள் நுழையாத வாறு சுற்று வேலி அமைத்தால் அதன் நடமாட்டம் குறையும். ஆகவே ரயில்வே நிர்வாகங்கள் வாகன நிறுத்துமிடங்களில் கூரை, கம்பி வேலி அமைத்து தரமான முறையில் வாகனங்களை பாதுகாப்பதை உறுதி செய்ய முன்வர வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் இது போன்ற அடிப்படை வசதிகளை ஆய்வுக்கு வரும் ரயில் பயணிகள் வசதிகள் குழுவிடம் தெரிவிக்க வேண்டும்.