ADDED : மே 28, 2025 07:09 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நலச்சங்கத்தின் 63ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் சங்க அலுவலகத்தில் நடந்தது.
கர்னல் ராஜ மகேந்திரன் தலைமை வகித்தார். சங்க தலைவர் பாண்டியன் வரவேற்றார். பொதுச்செயலாளர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். குமரேசன் மற்றும் சங்க நிர்வாகிகள் பேசினர். பொதுக்குழு கூட்ட அறிக்கை, 2024--25ம் ஆண்டுக்கான வரவு, செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது.