/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ எதிர்கோட்டையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் எதிர்கோட்டையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
எதிர்கோட்டையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
எதிர்கோட்டையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
எதிர்கோட்டையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : மே 31, 2025 12:27 AM

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் எதிர்கோட்டையில் மானுார் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மானுார் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சங்கரன்கோவிலில் இருந்து வெம்பக்கோட்டை, குண்டாயிருப்பு எதிர்கோட்டை வழியாக குழாய்கள் பதிக்கப்பட்டு சிவகாசிக்குகுடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.
இந்நிலையில் எதிர்கோட்டையில் ஒரு மாதத்திற்கு முன்பு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட குழாய் உடைந்து குடிநீர் முழுவதும் வீணாகி ரோட்டில் ஓடியது. இதனைத் தொடர்ந்து அங்கு உடைந்த குழாய் சரி செய்யப்பட்டது.
ஆனால் சரியாக வேலை நடைபெறாததால் ஒரு வாரத்திலேயே மீண்டும் அதே இடத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி ரோட்டில் ஓடுகின்றது. இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே உடனடியாக சேதமடைந்த குழாயினை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.