/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிவகாசி கோணம்பட்டியில் செயல்படாத புறக்காவல் நிலையம் சிவகாசி கோணம்பட்டியில் செயல்படாத புறக்காவல் நிலையம்
சிவகாசி கோணம்பட்டியில் செயல்படாத புறக்காவல் நிலையம்
சிவகாசி கோணம்பட்டியில் செயல்படாத புறக்காவல் நிலையம்
சிவகாசி கோணம்பட்டியில் செயல்படாத புறக்காவல் நிலையம்
ADDED : மே 31, 2025 12:26 AM

சிவகாசி: சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட கோணம்பட்டியில் ஒரு ஆண்டிற்கு முன்பு அமைக்கப்பட்ட காவல் நிலையம் செயல்பாடாக தான் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி திருத்தங்கல்போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பஸ் ஸ்டாண்ட் அருகிலும் கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பாறை பட்டியிலும் புறக் காவல் நிலையம் செயல்பட்டு வந்தது.
இரு புறக் காவல் நிலையங்களும் நகருக்கு உள்ளேயே அமைந்ததால், குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக புறக்காவல் நிலையங்களை நகரின் எல்லையில் அமைக்க ஓர் ஆண்டுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்த புறக்கவல் நிலையம் எடுக்கப்பட்டு வடமலாபுரம் பாலம் அருகே அமைக்கப்பட்டது. இது உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு சோதனை சாவடியாகவும் தற்போது செயல்பட்டு வருகிறது.
அதேபோல் பாறைப்பட்டிக்கு பதிலாக நகர் எல்லையான சாத்துார் ரோட்டில் கோணம்பட்டியில் தனியார்நிதி உதவியுடன் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த புறக் காவல் நிலையம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து செயல்படவில்லை.
எனவே இங்குள்ள புறக் காவல் நிலையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.