/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சர்வதேச ஸ்கேட்டிங் போட்டி சவுடாம்பிகா பள்ளி சாதனை சர்வதேச ஸ்கேட்டிங் போட்டி சவுடாம்பிகா பள்ளி சாதனை
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டி சவுடாம்பிகா பள்ளி சாதனை
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டி சவுடாம்பிகா பள்ளி சாதனை
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டி சவுடாம்பிகா பள்ளி சாதனை
ADDED : மே 31, 2025 12:25 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் சுமன் 9, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் 2ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரபாகர்-மேனகா தம்பதியின் மகன் சுமன். இவர் அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்டர்நேஷனல் (சிபிஎஸ்இ.,) பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறார். மாணவர் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்.
இவர் மே 24ல் இந்தோனேசியாவில் நடந்த சர்வதேச ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் 10 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கலந்து கொண்டுள்ளார். இந்தப் போட்டியில் இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 850க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மாணவர் சுமன் ரிலே போட்டியில் 2 ம் இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தையும், 400 மீட்டர் போட்டியில் 3ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவரையும் கோச் விஜயராம் பிரபுவையும் பள்ளி செயலர் ராஜேந்திரன்,தலைவர் கனகராஜ், பொருளாளர் பொன்ராஜ், முதல்வர் சாந்தா தேவி மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தினர்.