/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அகழாய்வு பொருட்களை ஆவணப்படுத்தும் பணி துவக்கம் அகழாய்வு பொருட்களை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்
அகழாய்வு பொருட்களை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்
அகழாய்வு பொருட்களை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்
அகழாய்வு பொருட்களை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்
ADDED : மே 31, 2025 12:27 AM

சிவகாசி: விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணி துவங்கியது.
இங்கு நடந்த அகழாய்வில் இதுவரையிலும் சுடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், வட்ட சில்லு, சூது பவள மணி, தங்க மணி உள்ளிட்ட 5003 கண்டெடுக்கப்பட்டுள்ளது.மூன்றாம் கட்ட அகழாய்வு ஒரு வாரத்திற்குமுன்பு முடிந்தது. இந்நிலையில் இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், மூன்றாம் கட்ட அகழாய்வு பணி முடிவடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணிநடக்கிறது. அதன்படி பொருட்களின் எடை, உயரம் உள்ளிட்ட விவரங்கள் அளவீடு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்படுகின்றது. தற்போது அதிகமான பொருட்கள் கிடைத்துஉள்ளதால் இந்தப் பணி குறைந்தது 4 மாதங்கள் நடைபெறும், என்றார்.