/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பழைய பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் பாதாளச்சாக்கடை பணிகள் மந்தம் பழைய பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் பாதாளச்சாக்கடை பணிகள் மந்தம்
பழைய பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் பாதாளச்சாக்கடை பணிகள் மந்தம்
பழைய பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் பாதாளச்சாக்கடை பணிகள் மந்தம்
பழைய பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் பாதாளச்சாக்கடை பணிகள் மந்தம்
ADDED : செப் 16, 2025 03:56 AM

விருதுநகர்: விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் வெளியே செல்லும் ரோட்டில் பாதாளச்சாக்கடை மேன்ஹோல் சீரமைப்புக்காக தோண்டி ஒரு வாரத்தை கடந்தும் பணிகள் துவங்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
விருதுநகரில் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் வெளியே செல்லும் ரோட்டில் பாதாளச்சாக்கடை மேன்ஹோல் சேதமாகியும், அடிக்கடி கழிவு நீர் வெளியேறி வந்தது. இதை சரிசெய்வதற்காக ஒரு வாரத்திற்கு முன்பு மேன்ஹோல் தோண்டப்பட்டு மண் அள்ளி வைக்கப்பட்டு பணிகள் துவங்குவதற்காக பேரிகார்டு வைத்து தடுப்புகளும் அமைக்கப்பட்டது.
ஆனால் ஒரு வாரத்தை கடந்தும் தற்போது வரை பணிகள் எதுவும் துவங்கப்படவில்லை. இதனால் அருப்புக்கோட்டை, சாத்துார், சிவகாசி செல்லும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் காலை, மாலை நேரங்களில் சிரமப்படுகின்றன.
மேலும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு தொடர்ந்து முன்னேறி செல்ல முடிவதில்லை. நகராட்சி நிர்வாகம் பணிகளை மந்தமாக செய்து வருவதால் நகரின் போக்குவரத்து நிறைந்த பகுதியை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு டூவீலரில் சென்று வருபவர்கள் தினசரி சிரமப்படுகின்றனர்.
எனவே பழைய பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் பாதாளச்சாக்கடை பணிகளை விரைந்து நகராட்சி நிர்வாகம் செய்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.