/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரோடு வசதி இல்லை, குடிநீர் இன்றி சிரமம் சாத்துார் சிந்தப்பள்ளி ஊராட்சி மக்கள் அவதி ரோடு வசதி இல்லை, குடிநீர் இன்றி சிரமம் சாத்துார் சிந்தப்பள்ளி ஊராட்சி மக்கள் அவதி
ரோடு வசதி இல்லை, குடிநீர் இன்றி சிரமம் சாத்துார் சிந்தப்பள்ளி ஊராட்சி மக்கள் அவதி
ரோடு வசதி இல்லை, குடிநீர் இன்றி சிரமம் சாத்துார் சிந்தப்பள்ளி ஊராட்சி மக்கள் அவதி
ரோடு வசதி இல்லை, குடிநீர் இன்றி சிரமம் சாத்துார் சிந்தப்பள்ளி ஊராட்சி மக்கள் அவதி
ADDED : செப் 16, 2025 03:55 AM

சாத்துார்: சேதமான ரோடுகள், திறக்கப்படாத அங்கனவாடி மையம், போதி குடிநீர் வசதி இல்லாத சூழல் என சாத்துார் சிந்தப்பள்ளி ஊராட்சி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
சிந்தப்பள்ளி ஊராட்சியில் சிந்தப்பள்ளி, மடத்துக்காடு, முத்தால் நாயக்கன்பட்டி, கீழ ஒட்டம்பட்டி, அருந்ததியர் காலனி ஆகிய பகுதிகள் உள்ளன. சிந்தப் பள்ளி முதல் தெருவில் ரோடு வசதி இல்லை. 2வது தெருவில் ஊராட்சி துவக்கப்பள்ளி அருகில் செல்லும் வாறுகால் குப்பை நிறைந்து காணப்படுகிறது. துர்நாற்றத்தால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
இங்கு மெயின் ரோட்டில் அங்கன்வாடி பள்ளி கட்டடம் புதியதாக கட்டப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளதால் அருகில் உள்ள சேதமடைந்த அங்கன்வாடி கட்டடத்தில் வைத்து அங்கன்வாடி செயல்படுகிறது. முத்தால் நாயக்கன்பட்டியில் மக்கள் பயன்படுத்தி வந்த சுகாதார வளாகம் தற்போது சேதமடைந்து இடிந்து போன நிலையில் உள்ளது. கீழ ஒட்டம்பட்டி அருந்ததியர் காலனியில் வாறுகால்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன.
ஊராட்சியில் குடிநீர் போதிய வினியோகம் இல்லை. வந்தாலும் உப்பு சுவையுடன் உள்ளதால் மக்கள் மினரல் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். பயணிகள் நிழற்குடை சேதம் அடைந்த நிலையில் உள்ளது.