/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வேகமாக வற்றும் சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம்: விவசாயிகள் பாதிப்பு வேகமாக வற்றும் சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம்: விவசாயிகள் பாதிப்பு
வேகமாக வற்றும் சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம்: விவசாயிகள் பாதிப்பு
வேகமாக வற்றும் சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம்: விவசாயிகள் பாதிப்பு
வேகமாக வற்றும் சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம்: விவசாயிகள் பாதிப்பு
ADDED : செப் 16, 2025 03:56 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்று பகுதியில் தொடரும் கடும் கோடையால் பாசன நீர் தேக்கங்கள் விரைந்து வற்றி வருகின்றன. இருப்பினும் கிணற்று நீரை நம்பி நாற்று உற்பத்தியை துவங்கி உள்ளனர்.
ராஜபாளையம் அடுத்த தேவதானம், சேத்துார் பகுதி விவசாயிகளுக்கு சாஸ்தா கோயில் நீர் தேக்கம் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. இரு மாதங்களாக கடும் வெயில் பாதிப்பினால் சுற்றியுள்ள நகரக்குளம், பெரியகுளம், வாண்டையார்குளம் உள்ளிட்ட கண்மாய்கள் நீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. 33 அடி உயரம் உள்ள சாஸ்தா கோயில் நீர் தேக்கம் தற்போது பாதி அளவை எட்டி உள்ளது. இந்நிலையில் இதை நம்பியுள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய பகுதிகளில் நெல் நடவு பணிக்காக வயல்களில் நாற்று தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்மாய்களில் நீர் இருப்பு இல்லாத நிலையில் கிணற்று பாசன விவசாயிகளும் அருகிலுள்ள விவசாயிகள் நீரை வாடகைக்கு வாங்கியும் நெல் நாற்று உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கோடை வெயில் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.