/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சாத்துாரில் அடிக்கடி திருடு போகும் டூவீலர்கள் போலீசார் திணறல்சாத்துாரில் அடிக்கடி திருடு போகும் டூவீலர்கள் போலீசார் திணறல்
சாத்துாரில் அடிக்கடி திருடு போகும் டூவீலர்கள் போலீசார் திணறல்
சாத்துாரில் அடிக்கடி திருடு போகும் டூவீலர்கள் போலீசார் திணறல்
சாத்துாரில் அடிக்கடி திருடு போகும் டூவீலர்கள் போலீசார் திணறல்
ADDED : பிப் 12, 2024 04:27 AM
சாத்துார்: சாத்துார் நகர் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் டூவீலர்கள் அடிக்கடி திருட்டு போகின்றன. திருடர்களை கண்டுபிடித்து இருசக்கர வாகனங்களை மீட்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.
சாத்துார் நகரில் ஆண்டாள்புரம், தென் வடல் புது தெரு, காமாட்சியார் தெரு, கீழ்காந்தி நகர், மேல காந்தி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும் டூவீலர்கள் அடிக்கடி திருட்டு போகின்றன.
டூவீலர் திருட்டு போன உடனே சி.சி.டி.வி., கேமரா மூலம் போலீசார் விசாரணையில் ஈடுபடுகின்றனர். இருந்தபோதும் குற்றவாளிகளை பிடிக்க ஏன் இந்த காலதாமதம் என தெரியவில்லை. காலதாமதம் செய்ய செய்ய இருசக்கர வாகனங்களை பறி கொடுத்தவர்கள் தங்களுக்கு வாகனங்கள் திரும்ப கிடைக்காதோ என்ற கவலைக்கு ஆளாகும் நிலை உள்ளது.
திருடியவர்களை அடையாளம் காண முடியாமல் உள்ளூர் போலீசார் திணறுவதாக பொதுமக்கள் கருதுகின்றனர். சாத்துார் நகர் பகுதியை நன்கு அறிந்த முன் அனுபவமிக்க போலீசாரின் உதவியை நாடியாவது நகர் போலீசார் விரைந்து திருடர்களை பிடித்து இருசக்கர வாகனங்களை மீட்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.