ADDED : ஜன 11, 2024 05:09 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சி.ஐ.டி.யு., மண்டல பொதுச்செயலாளர் வெள்ளத்துரை தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மண்டல பொதுச்செயலாளர் பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். இவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ராஜபாளையத்தில் ஜவகர் மைதானம் முன்பு சி.ஐ.டி.யு., கிளை செயலாளர் சன்னாசி தலைமையில் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்திய தொழிற்சங்கத்தினர் சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகில் மறியலில் ஈடுபட்டனர். 32 பேரை கிழக்கு போலீசார் கைது செய்தனர் ஸ்ரீவில்லிபுத்தூரில் மத்திய சங்கத் தலைவர் முனீஸ்வரன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.