/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/இன்று ஆண்டாள்௴ கோயில் தெப்ப தேரோட்டம் 100 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்புஇன்று ஆண்டாள்௴ கோயில் தெப்ப தேரோட்டம் 100 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு
இன்று ஆண்டாள்௴ கோயில் தெப்ப தேரோட்டம் 100 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு
இன்று ஆண்டாள்௴ கோயில் தெப்ப தேரோட்டம் 100 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு
இன்று ஆண்டாள்௴ கோயில் தெப்ப தேரோட்டம் 100 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு
ADDED : பிப் 24, 2024 05:52 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் இன்று இரவு நடக்கும்ஆண்டாள் தெப்ப தேரோட்டத்தை முன்னிட்டு, குற்றங்கள், நகை திருட்டு சம்பவங்களை தடுக்கும் பொருட்டு நூறு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
எட்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டாள் கோயில் திருமுக்குளத்தில் தெப்பத் திருவிழா இன்று முதல் 3 நாட்கள் தினமும் இரவு 7:00 மணிக்கு நடக்கிறது.
இதனை முன்னிட்டு கோயில் நிர்வாகம், நகராட்சி, போலீஸ், தீயணைப்பு துறை உட்பட பல்வேறு அரசு துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை நேற்று நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன், கமிஷனர் ராஜா மாணிக்கம், டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார், செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தெப்பத்தை சுற்றி 100 கேமராக்களும், பழைய குற்றவாளிகளை கண்டறிய உதவும் வகையில் எஃப்.ஆர். எஸ் என்ற புதிய தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தீயணைப்புத் துறையினர், ஊர்காவல் படையினர் 50 நீச்சல் வீரர்கள் என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
திருவிழாவை காண நகைகள்அணிந்து வரும் பெண்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் உஷாராக இருப்பதும், போலீசாரின் அறிவுரைகளை கடைப்பிடிப்பதும் அவசியமென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.