/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/குப்பைக்கு தீ வைப்பு, குடிநீர், சுகாதாரவளாகம் இல்லை குப்பைக்கு தீ வைப்பு, குடிநீர், சுகாதாரவளாகம் இல்லை
குப்பைக்கு தீ வைப்பு, குடிநீர், சுகாதாரவளாகம் இல்லை
குப்பைக்கு தீ வைப்பு, குடிநீர், சுகாதாரவளாகம் இல்லை
குப்பைக்கு தீ வைப்பு, குடிநீர், சுகாதாரவளாகம் இல்லை
ADDED : ஜூன் 12, 2024 06:10 AM
ராஜபாளையம் : புது ரோடு, சுகாதார வளாக வசதி இல்லை என்பது உட்பட பல்வேறு பிரச்சனைகளில் வீர தர்மாபுரம் குடியிருப்புவாசிகள் சிக்கி தவிக்கின்றனர்.
இதுகுறித்து குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் நாகரத்தினம், கருப்பசாமி, பத்ரகாளி, காளீஸ்வரன், மாடசாமி கூறியதாவது, கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் இக்குடியிருப்பு உருவாகி 25 ஆண்டுக்குமேல் ஆகியும் அடிப்படை வசதி இல்லை.
அய்யனார் கோயிலில் இருந்து நகருக்கு குடிநீர் சப்ளையும், இதே கிராம பகுதியில் தாமிரபரணி குடிநீர் குழாய் குடியிருப்பில் வழியாக சென்றும் குடிநீருக்கு ஏங்கும் நிலை உள்ளது.
அருகாமை பகுதி காந்திநகர் என விரிவடைந்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் இரண்டு முறை சாலை மறியல் செய்து அருகில் உள்ள புதுக்குளம் கண்மாயில் ஆழ்துளை குழாய் மூலம் சப்ளைக்கு மின் இணைப்பு பெட்டி அமைத்து தற்போது வரை சர்வீஸ் வழங்காமல் காட்சி பொருளாக உள்ளது.
மெயின் பகுதியான வீரதர்மாபுரத்தில் கழிவுநீர் வெளியேற வசதியின்றி குடியிருப்பை ஒட்டியுள்ள கிணற்றில் வழிந்து சுகாதாரக் கேடு ஏற்படுத்தி வருகிறது.
குடியிருப்பு கழிவுகள் வெளியேற்ற துாய்மை பணியாளர்களுக்கு காத்திருந்தும் வேறு வழியின்றி நமக்கு நாமே என்பது போல் குடியிருப்பு வாசிகள் இணைந்து வெளியேற்றி காய்ந்த பின் தீ வைத்தும் அகற்றி வருகிறோம்.
காந்தி நகரில் பழைய தெருக்களை புதிதாக அமைக்காமல் வாறுகால்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கியும் பணிகளை முடித்துள்ளனர்.
அடித்தட்டு மக்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் சூழலில் குடிநீர் ,புழங்குவதற்கான தண்ணீர் பற்றாக்குறை காலத்தில் தண்ணீர் விலைக்கு வாங்கியும் அருகாமை பகுதியில் தள்ளுவண்டி மூலம் கொண்டு வர வேண்டி உள்ளது.
மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்ட குழாய் இணைப்பு மூலம் தண்ணீர் சப்ளை இல்லை. சுகாதார வளாகம் இல்லாததால் கண்மாய், ரோட்டோரம் திறந்தவெளியை உபயோகிக்கும் நிலை உள்ளது.
எதிர்ப்பை மீறி அடுத்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்துள்ளதால் சமூக விரோத செயல்கள், பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
குடியிருப்புகளில் குப்பை முறையாக அகற்றாததால் ரோட்டோரங்களில் எரிப்பதும், நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வதும் தொடர் பிரச்சனையாக இருந்து வருகிறது. நகராட்சி அருகே குடியிருப்பு அமைந்தும் வசதிகள் குறைவாக உள்ளதால் மிகுந்த சிரமமடைந்து வருகிறோம். என்றனர்.