/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அருப்புக்கோட்டை - இருக்கன்குடி பள்ளமான ரோடு: 10 கிராமத்தினர் அவதி அருப்புக்கோட்டை - இருக்கன்குடி பள்ளமான ரோடு: 10 கிராமத்தினர் அவதி
அருப்புக்கோட்டை - இருக்கன்குடி பள்ளமான ரோடு: 10 கிராமத்தினர் அவதி
அருப்புக்கோட்டை - இருக்கன்குடி பள்ளமான ரோடு: 10 கிராமத்தினர் அவதி
அருப்புக்கோட்டை - இருக்கன்குடி பள்ளமான ரோடு: 10 கிராமத்தினர் அவதி
ADDED : ஜூன் 12, 2024 06:11 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சுக்கில நத்தம் வழியாக செல்லும் இருக்கன்குடி ரோடு முழுவதும் பள்ளங்களாக இருப்பதால் இதனால் 10 கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டையில் இருந்து இருக்கன்குடி கோயிலுக்கு செல்ல சுக்கிலநத்தம், திருவிருந்தாள்புரம், வெள்ளையாபுரம், ஆமணக்குநத்தம், ஆ.கல்லுப்பட்டி, கோட்டூர் வழியாக குறைந்த தூரத்தில் இருக்கன்குடி செல்வதற்கு ஏற்ற ரோடு இது. இந்த ரோட்டை பயன்படுத்தி தான் 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் வந்து செல்வர். இருக்கன்குடிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் இந்த ரோடு வழியாகத்தான் செல்வர்.
ரோட்டில் முக்கியத்துவத்தை கருதி 8 ஆண்டுகளுக்கு முன்பு ரோடு 2 வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் ரோடு அகலப்படுத்தி போடப்பட்டது.
இந்த ரோட்டை பயன்படுத்தி குவாரிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் அதிக பாரத்துடன் வந்து செல்வதால் ரோட்டின் ஒரு பகுதி பள்ளமாக மாறிவிட்டது.
தொடர்ந்து அதிக எடையுடன் செல்லும் லாரிகளால் அருப்புக்கோட்டையில் இருந்து ஆமணக்குநத்தம் வரையுள்ள 9 கி.மீ., ரோடு முழுவதும் கிடங்காக மாறிவிட்டது. இதனால் டூவீலர்களில் செல்பவர்கள் வளைந்து நெளிந்து தான் செல்ல வேண்டியுள்ளது.
கிராமங்களில் இருந்து தினமும் அருப்புக்கோட்டை வந்து செல்லும் பொது மக்கள், பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலை துறையினர் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டை புதியதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.