/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வ.புதுப்பட்டி பேரூராட்சி வார்டு விசிட் : சேதமடைந்த வாறுகால்; குறுகிய ரோட்டால் விபத்து அபாயம் வ.புதுப்பட்டி பேரூராட்சி வார்டு விசிட் : சேதமடைந்த வாறுகால்; குறுகிய ரோட்டால் விபத்து அபாயம்
வ.புதுப்பட்டி பேரூராட்சி வார்டு விசிட் : சேதமடைந்த வாறுகால்; குறுகிய ரோட்டால் விபத்து அபாயம்
வ.புதுப்பட்டி பேரூராட்சி வார்டு விசிட் : சேதமடைந்த வாறுகால்; குறுகிய ரோட்டால் விபத்து அபாயம்
வ.புதுப்பட்டி பேரூராட்சி வார்டு விசிட் : சேதமடைந்த வாறுகால்; குறுகிய ரோட்டால் விபத்து அபாயம்

வேண்டும் பஸ் வசதி
பூப்பாண்டி, குடியிருப்பாளர்: அணைக்கரைப்பட்டியில் ஏராளமான குடும்பங்கள் வசிக்கும் நிலையிலும், இங்குள்ள பெருமாள் கோயிலுக்கு வெளியூர் பக்தர்கள் வரும் நிலையிலும் போதிய பஸ் வசதி இல்லை. ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. மினி பஸ் கூட விலக்கு ரோடு வழியாகத்தான் வருகிறது. எனவே, அரசு பஸ் இயக்கப்பட வேண்டும். இருபுறமும் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்த வேண்டும்.
பேரூராட்சியில் கோரிக்கை
சொர்ணரத்தினம், வார்டு உறுப்பினர்: அணைக்கரைப்பட்டி ரோடு சீரமைத்தல், உடையார் பாலத்தில் ரோடு, பாலம் சீமைத்தல், மயானம் சீரமைத்தல், மின் விளக்குகள் அமைத்தல், கூடுதல் தண்ணீர் வசதி செய்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.
குறைகள் சரி செய்யப்படும்
சுப்புலட்சுமி, தலைவர்: பல ஆண்டுகளாக போடப்படாமல் இருந்த அணைக்கரைப்பட்டி ரோடு போடப்பட்டுள்ளது. மயானம் மற்றும் மயானம் ரோடு சீரமைக்கப்பட்டுள்ளது.