ADDED : ஜூன் 12, 2024 06:09 AM

சிவகாசி : உலக சிலம்பம் விளையாட்டுக் கழகம் சார்பில் கோவைக்காம ஆறுமுகம் பயில்வான் நினைவு கோப்பை ஓபன் சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் 2024 போட்டி கோயமுத்துார் எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்தது.
இதில் பங்கேற்ற சிவகாசி ஆர்.எஸ்.ஆர்., இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் 6ம் வகுப்பு விக்னேஷ் கார்த்தி, 5ம் வகுப்பு குருசரண், 9ம் வகுப்பு ஜெய் சூர்யா ஆகியோர் சிலம்பம் ஒற்றைக்கம்பு வீச்சில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைவர் சண்முகையா, தலைமையாசிரியர் முத்துலட்சுமி, ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.