/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரை தாக்கிய ஓட்டுநர்அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரை தாக்கிய ஓட்டுநர்
அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரை தாக்கிய ஓட்டுநர்
அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரை தாக்கிய ஓட்டுநர்
அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரை தாக்கிய ஓட்டுநர்
ADDED : ஜன 28, 2024 01:59 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் பாலமுருகன் 47, என்பவரை விடுப்பு கேட்டு ஓட்டுநர் பாலசுப்பிரமணி தாக்கியதால் போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனையில் கிளை மேலாளராக பணியாற்றுபவர் பாலமுருகன். இவர் ஜன. 26 காலை 11:20 மணிக்கு பணிமனை அலுவலகத்தில் இருந்தார். அங்கு வந்த மீசலுார் அண்ணாநகரைச் சேர்ந்த ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் விடுமுறை கடிதத்தில் கையெழுத்திடுமாறு கூறியுள்ளார். அதற்கு பாலமுருகன் தொடர்ந்து 7 நாட்களாக எவ்வித அனுமதியும் இல்லாமல் விடுப்பு எடுத்ததால் கையெழுத்து போட முடியாது, உதவி பொறியாளரிடம் கேட்டுக்கொள்கிறேன் என பதில் அளித்துள்ளார். ஆனால் விடுப்பு வழங்க வேண்டும் என கிளை மேலாளரை ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் தாக்கினார். விருதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.