/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/போலி ஆவணம் தயாரித்து சம்பள மோசடி ஊராட்சி செயலர் தற்காலிக பணி நீக்கம்போலி ஆவணம் தயாரித்து சம்பள மோசடி ஊராட்சி செயலர் தற்காலிக பணி நீக்கம்
போலி ஆவணம் தயாரித்து சம்பள மோசடி ஊராட்சி செயலர் தற்காலிக பணி நீக்கம்
போலி ஆவணம் தயாரித்து சம்பள மோசடி ஊராட்சி செயலர் தற்காலிக பணி நீக்கம்
போலி ஆவணம் தயாரித்து சம்பள மோசடி ஊராட்சி செயலர் தற்காலிக பணி நீக்கம்
ADDED : ஜன 07, 2024 04:05 AM
காரியாபட்டி; குடிநீர் ஆப்பரேட்டர் பெயரில் போலி ஆவணங்கள் தயார் செய்து பணியில் இருந்தது போல் கணக்கு காட்டி சம்பளத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்ட முடுக்கன்குளம் ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
காரியாபட்டி முடுக்கன்குளம் ஊராட்சியில் 2016 - -17ல் குடிநீர் ஆப்பரேட்டராக வேலை பார்த்த ராஜா, ஊராட்சி நிர்வாகத்து தகவல் தெரிவிக்காமல் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றார்.
ஊராட்சி செயலாளராக இருந்த தங்கப்பாண்டியன் குடிநீர் ஆப்பரேட்டர் ராஜா பெயரில் போலி ஆவணங்கள் தயார் செய்து, பணியில் இருந்தது போல் கணக்கு காட்டி, சம்பளத்தை எடுத்து வந்தார். இது தொடர்பான புகாரை பி.டி.ஓ., போத்திராஜ் விசாரணை செய்ததில், ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை தற்காலிக பணிநீக்கம் செய்த பி.டி.ஓ., டி.வேப்பங்குளம் ஊராட்சி செயலர் ராஜாவை முடுக்கன்குளம் ஊராட்சி செயலாளராக கூடுதல் பொறுப்பாக பணியாற்றுவார் என தெரிவித்தார்.