மாநில அளவிலானபுத்தக விமர்சன போட்டி
மாநில அளவிலானபுத்தக விமர்சன போட்டி
மாநில அளவிலானபுத்தக விமர்சன போட்டி
ADDED : ஜன 28, 2024 06:36 AM
விருதுநகர், : விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி, வாசகர் மன்றம், இதயம் குழுமம் இணைந்து மாநில அளவிலான புத்தக விமர்சன போட்டியை நடத்தியது.
கிறிஸ்டோபர் கல்லுாரியை சேர்ந்த ஜென்சி, டோக் பெருமாட்டி கல்லுாரியை சேர்ந்த சக்தி ஷிவானி முதல் பரிசையும், காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி மாணவி கஸ்துாரி, அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி நோவிகா ரூபி ஆகியோர் 2ம் பரிசையும், டோக் பெருமாட்டி கல்லுாரி பிரியதர்ஷினி, ராகவர்ஷினி அன்னபூர்ணா பொறியியல் கல்லுாரி ஹரிஷ்கிருஷ்ணன், ஆறுதல் பரிசையும் வென்றனர்.
இதயம் குழும தலைவர் முத்து பங்கேற்று பேசினார். கல்லுாரி செயலாளர் தர்மராஜன், முதல்வர் செந்தில், வாசகர் மன்ற தலைவர் அமுதா, ஏற்பாடுகளை செய்தனர். ஜே.சி.ஐ., தலைவர் சுப்பிரமணியன், விருதை பாரதிகள் குழுவினர் பங்கேற்றனர்.