நாங்க இப்பவும் கணவன், மனைவி தான்; ஏ.ஆர். ரஹ்மான் மனைவி சாய்ரா பானு
நாங்க இப்பவும் கணவன், மனைவி தான்; ஏ.ஆர். ரஹ்மான் மனைவி சாய்ரா பானு
நாங்க இப்பவும் கணவன், மனைவி தான்; ஏ.ஆர். ரஹ்மான் மனைவி சாய்ரா பானு
ADDED : மார் 16, 2025 05:39 PM

சென்னை: தன்னை இனி யாரும் ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம் என்று சாய்ரா பானு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் விருது, கிராமி விருது, அகாடமி விருது, கோல்டன் குளோபல் விருது மற்றும் தேசிய விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், இன்று திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நெஞ்சு வலி என தகவல் வெளியான நிலையில், பயணம் தொடர்பால் அவர் பெரும் களைப்பாக இருந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் விரைந்து குணம் பெற வேண்டி அறிக்கை விட்டுள்ள சாய்ரா பானு, இனி தன்னை யாரும் ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், 'நாங்கள் இருவரும் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. இருவரும் கணவன், மனைவி பந்தத்தில் தான் இருக்கிறோம். கடந்த 2 ஆண்டுகளாக எனக்கு உடல்நலப் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். எந்தவகையிலும் அவருக்கு நான் அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. என்னை இனி யாரும் முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் பிரிந்திருந்தாலும், அவருக்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.