/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கேள்விக்குறி * அரசு மாணவர் விடுதிகளின் செயல்பாடுகள் * அடிக்கடி கலெக்டர் ஆய்வு அவசியம்கேள்விக்குறி * அரசு மாணவர் விடுதிகளின் செயல்பாடுகள் * அடிக்கடி கலெக்டர் ஆய்வு அவசியம்
கேள்விக்குறி * அரசு மாணவர் விடுதிகளின் செயல்பாடுகள் * அடிக்கடி கலெக்டர் ஆய்வு அவசியம்
கேள்விக்குறி * அரசு மாணவர் விடுதிகளின் செயல்பாடுகள் * அடிக்கடி கலெக்டர் ஆய்வு அவசியம்
கேள்விக்குறி * அரசு மாணவர் விடுதிகளின் செயல்பாடுகள் * அடிக்கடி கலெக்டர் ஆய்வு அவசியம்
ADDED : பிப் 11, 2024 12:40 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டத்தில் அரசு மாணவர் விடுதிகளின் செயல்பாடுகள் முறையாக உள்ளதா என்பது குறித்தும், விடுதிகளில் செய்யப்பட வேண்டிய வசதிகள் குறித்தும் அடிக்கடி கலெக்டர் நேரடி ஆய்வு செய்து குறைகளை தீர்ப்பது அவசியமாகிறது.
தமிழகத்தில் பொருளாதார ரீதியாக விளிம்பு நிலையில் வாழும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் வாழ்வில் கல்வி ஒளியேற்ற உதவும் வகையில் தாலுகா தோறும் ஆதிதிராவிடர் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என பல்வேறு மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகிறது.
இங்கு தங்கி பயிலும் மாணவர்களுக்கு மூன்று வேலை உணவு, வாரம் ஒரு நாள் அசைவ உணவுகள், விளையாட்டு பொருட்கள், சீருடைகள், பாய், தலையணை, போர்வை, மருத்துவ பரிசோதனைகள், மேல்நிலை வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் உட்பட ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகிறது.
இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதிகளில் ஏராளமான மாணவர்கள் தங்கி படிப்பதாக ஆவணங்களில் கூறப்படுகிறது. ஆனால் பல மாணவர் விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கை, இரவு தங்குதல் போன்றவை கேள்விக்குரியதாக இருப்பதாக புகார் எழுந்து வருகிறது.
இதனையடுத்து கடந்த காலங்களில் அந்தந்த தாலுகாவில் உள்ள விடுதிகளில் இரவு நேரங்களில் தாசில்தார்கள் திடீர் ஆய்வு நடத்தி, மாணவர்களின் நலன்கள் குறித்தான குறைகள் கண்டறியப்பட்டது.
இதன் பயனாக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட மாணவர் விடுதி கட்டடங்கள் இடித்துவிட்டு புதிதாக கட்டப்பட்டும், சில விடுதிகளில் சீரமைப்புகளும் செய்யப்பட்டுள்ளது. பல விடுதி கட்டடங்கள் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது.
ஆனாலும் ஒரு காலத்தில் அரசு மாணவர் விடுதியில் தங்கி படிக்க போட்டி போடும் நிலை இருந்தது. ஆனால் தற்போது இலவச பஸ்கள், சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் விடுதியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனை தக்க வைக்க விடுதி பொறுப்பாளர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தற்போது பள்ளி மாணவர்களை விட கல்லூரி மாணவர்களே தங்கி படிக்க விடுதி வசதி இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே மிகவும் குறைந்த அளவே பள்ளி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் கல்லூரி மாணவர்களையும் தங்கி படிக்க அரசு அனுமதிக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் உள்ள குறைபாடுகளை தீர்க்கும் பொருட்டு தாசில்தார்கள் நேரடி ஆய்வு செய்வது தற்போது குறைந்து வருவதாக தெரிகிறது. அவ்வாறு ஆய்வு செய்து ஒரு சில தாசில்தார்கள் வழங்கும் குறைகள் மீது மேல் நடவடிக்கை எடுப்பதில் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள் தாமதமாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாணவர் விடுதிகளிலும் உள்ள அடிப்படை குறைகளை சரி செய்யவும், பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள விடுதிகளில் கல்லூரி மாணவர்களை தங்கி படிக்க வைக்கவும், உயர் கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தரவும் தினமும் ஒரு அரசு மாணவர் விடுதியை கலெக்டர் நேரடி ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.