/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/போஸ்டல் துறை விபத்து காப்பீடு திட்டம்;போஸ்டல் துறை விபத்து காப்பீடு திட்டம்;
போஸ்டல் துறை விபத்து காப்பீடு திட்டம்;
போஸ்டல் துறை விபத்து காப்பீடு திட்டம்;
போஸ்டல் துறை விபத்து காப்பீடு திட்டம்;
ADDED : ஜூலை 05, 2024 04:15 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:
இந்திய அஞ்சல் துறையில் அமுல்படுத்தப்பட்டுள்ள விபத்து காப்பீடு திட்டத்தில் ரூ. 799 பிரீமியம் செலுத்தினால் ரூ. 15 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும் என்பது குறித்த விழிப்புணர்வு ஏழை, எளிய மக்களிடம் சென்றடைய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது.
மாவட்டத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியால் தினமும் ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டு பலர் காயமடைந்து வருகின்றனர். சிலர் உடல் ஊனமடைகின்றனர். சிலர் உயிரிழப்பிற்கு ஆளாகின்றனர். விபத்தில் சிக்குபவர்கள் மருத்துவ செலவிற்காக மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகும் நிலை காணப்படுகிறது.
இந்நிலையில் இந்தியஅஞ்சல் துறை சார்பில் இந்தியா போஸ்டல் பேமென்ட் வங்கி செயல்படுத்தியுள்ள விபத்து காப்பீடு திட்டத்தில் இணைந்து ஆண்டுக்கு ரூ. 520 பிரிமியம் தொகை செலுத்தினால் ரூ. 10 லட்சம் வரையிலும், ரூ. 799 பிரிமியம் தொகை செலுத்தினால் ரூ. 15 லட்சம் வரையிலும் கவரேஜ் பெறலாம்.
இதில் உயிரிழப்புகள், உடல் ஊனம், மருத்துவமனை செலவுகள் உட்பட பல்வேறு செலவினங்களுக்கு காப்பீடு தொகை பெறலாம்.
இதற்காக மக்கள் போஸ்ட் ஆபீஸ் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தங்கள் தெருவிற்கு வரும் போஸ்ட்மேன் மூலமே திட்டத்தில் உடனடியாக இணைந்து விடலாம். 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு குறைந்த கட்டணத்தில் அதிகபட்ச மருத்துவ காப்பீடு பெரும் வகையில் உள்ள இந்த திட்டம் குறித்து கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகரப்புற மக்களுக்கும் விழிப்புணர்வு இல்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் இந்திய அஞ்சல் துறை விபத்து காப்பீடு திட்டம் குறிது அனைத்து தரப்பு மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம்.