Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிவகாசியில் ஓட்டல்கள், கடைகளில் ஆய்வு

சிவகாசியில் ஓட்டல்கள், கடைகளில் ஆய்வு

சிவகாசியில் ஓட்டல்கள், கடைகளில் ஆய்வு

சிவகாசியில் ஓட்டல்கள், கடைகளில் ஆய்வு

ADDED : ஜூலை 05, 2024 04:15 AM


Google News
சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசியில் ஓட்டல்கள்,கடைகளில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்து பாலிதீன் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

அன்றாட வாழ்க்கையில் பாலிதீன் பைகளை அதிகளவில் மக்கள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என 2019 ஜன. 1 முதல் தமிழகம் முழுவதும் பாலிதீன் பொருட்களுக்கு அரசு தடை விதித்தது. ஆனால் பாலிதீன் பயன்பாடு குறையாமல் அதிகரித்தே வருகிறது.

சிவகாசியில் வேலாயுதரஸ்தா ரோடு, பழைய விருதுநகர் ரோடு, விளாம்பட்டி ரோடு, நாரணாபுரம் ரோடு, சாத்துார் ரோடு, மருதுபாண்டியர் தெரு, சிறுகுளம் கண்மாய், கட்டளைப்பட்டி ரோடு, கங்காகுளம் ரோடு, உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் குப்பைகளோடு தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகளும் கொட்டப்படுகிறது. தவிர தண்ணீர் செல்லும் ஓடைகள், கண்மாய்களிலும் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

பெரும்பாலான குடியிருப்புவாசிகள் தங்களதுவீடு, கடைகளின் கழிவுகளான பாலிதீன் பை உள்ளிட்டவைகளை ரோட்டிலும், ஓடையிலும் கொட்டுகின்றனர். எனவே அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர்நாளிதழ் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார அலுவலர்கள்திருப்பதி, பகவதி பெருமாள், சுரேஷ், ஆய்வாளர் அபுபக்கர் சித்திக், துாய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள்சிவகாசியில் ஓட்டல்கள்,வணிக வளாகங்களில் தடை பாலிதீன் பொருட்கள் குறித்து ஆய்வு செய்தனர். ஆறு கடைகளில் தடை பாலிதீன் பைகள் இருப்பது கண்டறியப்பட்டு தலா ரூ. 2000 அபராதம் விதிக்கப்பட்டது.

கமிஷனர் கூறுகையில், மாநகராட்சியில் இதுகுறித்து ஆய்வு செய்ய சுகாதார அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருவர். கடைகள், நிறுவனங்களில் மொத்தமாக தடை பாலிதீன் பைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தால் அவைகள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்படும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us